June 6, 2025

உள்ளாடை போடாத மாளவிகா மோகனன்: சிவப்பு உடையில் கலக்கல் !

‘பட்டம் போல’ படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், ‘பேட்ட’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தார். பின்னர் தனுஷுடன் ‘மாறன்’ படத்தில் நடித்தார். கடந்த ஆண்டு இயக்குநர் பா. ரஞ்சித்தின் ‘தங்கலான்’ படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருந்தார்.

தற்போது ‘சர்தார் 2’ படத்தில் நடித்து வருகிறார். நடிப்பைத் தவிர, விளம்பரங்கள் மற்றும் மாடலிங் போட்டோஷூட்களிலும் மாளவிகா ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில், தனது சமீபத்திய படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார், அவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தனது பதிவில், “பசுமையான காட்டிற்குள், அழகான நீர்வீழ்ச்சியின் கீழ், முகத்தில் மழைத்துளிகள் விழுவதை உணர்ந்து, ஒவ்வொரு மூச்சிலும் காடுகளின் வாசனையை உள்ளிழுத்து, மரக்கிளைகள் வழியாக சூரிய ஒளி முகத்தில் படுவதைப் பார்த்து… நான் மகிழ்ச்சியில் மூழ்கிவிட்டேன்” என்று தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், “இங்குதான் என் ஆன்மா மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறது. இந்த அழகான தருணங்களைப் படம்பிடித்த அற்புதமான குழுவை நான் போற்றுகிறேன். இந்த நம்பமுடியாத படங்களை எடுக்க, நாங்கள் சிறிய நீரோடைகளைக் கடந்து நீர்வீழ்ச்சியை அடைந்தோம்” என்று கூறினார்.

அவரது இன்ஸ்டாகிராம் பதிவும் படங்களும் அவரது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. காட்டில் அவரது இயற்கை அழகையும் அமைதியான அனுபவத்தையும் ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

Loading